Wednesday, November 24, 2010

அஸ்ஸலமு அலைக்கும்......

இறைவன் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றோம்.

        உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்....

                            நாம் இத்தளத்தில் அறிந்துகொள்ள இருப்பது இறைவனால் அனுபப்பட்ட நபி மார்கள் பற்றியும் அவர்கள் வாழ்ந்த இடங்கள், இறைவன் ஒருவன் அவனுக்கு நிகர் யாருமில்லை என்பதர்க்கு திருகுரானில் உள்ள அத்தாட்சிகளையும் மற்றும் இஸ்லாம் பற்றி அறிஞர் பெரு மக்கள் பயன்களையும், அன்மையில் இஸ்லாத்தை ஏற்று கொண்ட நமது சகோதர, சகோதிரிகளின் விளக்கங்களையும் பார்போம்.

_________________________________________________________________________

The 100 - by Micheal H. Hart

  1. நாம் அனைவரும் வாசிக்க படவேண்டிய புத்தகம் ஒவ்வரு காலகட்டத்திலும் அந்த அந்த காலகட்டங்களில் சிறந்து விளங்கிய மாமனிதர்களை பற்றிய புத்தகம் தான் இந்த அந்த நூறு மனிதர்கள் (The 100 - by Michea...
    l H. Hart) புத்தக பிரியர்களுக்கும் மற்றும் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த புத்தகம் அறிவு பசிகேற்ற ஒரு நல்ல தீனியாகவே இருக்கும் . இந்த புத்தகம் உலக முழுவதும் நல்ல வரவேற்ப்பை பெற்ற புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது

    மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும், அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி தொகுத்து வெளியிட்ட புத்தகமே அந்த நூறு மனிதர்கள்.

    அவர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட 1000 மனிதர்களில் சிறந்த 100 மனிதர்களை வரிசைப்படுத்தியுள்ளார். வரிசைப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர் வரிசைப் படுத்தியதற்கான காரணங்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஏன் முதலிடம் தரப்பட்டுள்ளது, ஏன் இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது என காரண காரியங்களுடன் வளக்கியுள்ளார்.

    அவர் வரிசைப்படுத்திய மனிதர்களில் பல்வேறு மத தலைவர்களும், பல்வேறு கண்டுபிடிப்பாளர்களும், புரட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வெறு கொள்கைகளை அறிமுகப்படுத்திய தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அது தான் இந்த நூலின் முக்கியமான அம்சமாகும்.

    இந்த நூல் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. மைக்கேல் ஹர்ட வரிசைப்படுத்திய விதம் குறித்து பல்வேறு கருத்துக்களும் மறுப்புகளும் சில மதவாதிகளால் எடுத்துவைக்கப்பட்டது. காரணம் இந்த நூலில் ஹர்ட் இஸ்லாமிய தலைவரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முதலிடம் கொடுத்ததுதும் கிருத்துவ கடவுளாக கருதப்படும் ஏசுநாதருக்கு 3ம் இடம் கொடுத்ததுமே காரணம். பெரும்பான்மையான கிருத்தவர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் வரும் என்று அவர் முன்பே எதிர்பார்த்து இருந்ததால் தனது கருத்துக்களில் உறுதியாக இருந்தார் மைக்கேல் ஹர்ட். பின்னர் இந்த நூலை தமிழ்நாட்டு எழுத்தாளர் மனவை முஸ்தபா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்த புத்தகத்தை வாசிக்காத சிந்தனையார்களே இறக்கமுடியாது என்று கூட சொல்லலாம் ..
                                         
                                                            ***********

    கிழேயுள்ள லிங்க்யில் the 100 ஆங்கில புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    https://docs.google.com/uc?
    The 100 -Michael Hart.pdf - Google Docs




No comments:

Post a Comment